நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வாழக்கரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்
நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 26
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வாழக்கரை கிராமத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் உடன் இருந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 279 முழு நேர நியாயவிலைக்கடைகளும் 60 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 339 நியாயவிலைக்கடைகள் மூலம் 2,18,117 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கீழையூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் கீழ் 7 முழு நேர நியாயவிலைக்கடைகளும் 2 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.


வாழக்கரை கிராமத்தில் நியாயவிலைக்கடையில் 275 குடும்ப அட்டைத்தாரர்களும் ஆக மொத்தம் 530 குடும்ப அட்டைத்தாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.ராஜா (2018 -2019) மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய். 10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ப.அருளரசு வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் கீழையூர் ஒன்றியத்தலைவர் செல்வராணி ஞானசேகரன் வாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

