நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது .
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 25
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை கல்லூரி மாணவர்களிடையே வாக்காளர்
அடையாள அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் தன் ஆர்வத்துடன் முன் வந்து இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு 01.08.2022 முதல் 31.03.2023 முடிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன இணைப்பதன் மூலம் ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல் ஆகும். மேலும் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் 100 சதவீதம் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கல் வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதி படுத்துதல் மற்றும் பாதுகாத்தல். வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் தன் ஆர்வத்துடன் இணைக்க முன் வர வேண்டும்.மேலும் வாக்காளர்கள் இணையதளம் மூலமும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் தன் ஆர்வத்துடன் இணைக்க முன் வர வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் இதற்கான படிவம் 6டீ பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு முன் வர வேண்டும்.குறைந்த பட்சம் 50 வாக்காளர்களுக்கு ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன இணைத்திடவும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை எவ்வித தொய்வுமின்றி 100 சதவீதம் செயல்படுத்திட அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

மேலும் மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 17 வயது பூர்த்தியானவுடன் படிவம் 6 மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட இந்திய தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது. 18 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர் முருகேசன் நாகப்பட்டினம் வட்டாச்சியர் கார்த்திகேயன் வட்டாச்சியர்(தேர்தல்) சாந்தி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

