நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு உண்டு உறைவிட மாதிரி பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 25 நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு உண்டு உறைவிட மாதிரி பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாகூர் கிரசன்ட் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
மாதிரி பள்ளிகள் என்பன புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அல்ல 1921, 1972,1990 ஆகிய காலகட்டங்களில் அவைகள் உருவாக்கப்பட்டன ஆனால் உருவாக்கப்பட்டதன் பலனை அவைகள் அடைய இயலவில்லை 2018 – 19 ஆம் கல்வி ஆண்டுகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் அமைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்காலகட்டத்தில் 2021 – 22 ஆம் கல்வி ஆண்டில் கல்வியில் மிகவும் பின்தங்கிய 10 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைப்பது என அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி சார்ந்த செயல்பாடுகள் கலை அறிவியல் விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிட சந்தர்ப்பம் வழங்குவதை உறுதி செய்வதற்கான சிறப்பு திட்டமே மாதிரி பள்ளியின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் 10 கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் இந்த மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2022-23 ஆம் கல்வி ஆண்டில் மாதிரி பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் செயற்கை பெறுவதை நோக்கமாகக் கொண்டு 15 மாவட்டங்களில் கூடுதலாக மாதிரி பள்ளிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் 10 மாதிரி பள்ளிகளில் 800 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வசதிகளால் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு போட்டி தேர்வில் கலந்து கொள்ளும் விதம் சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. கல்வியில் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்ததில் சமூக பொருளாதார கலாச்சார காரணிகள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனைகள் ஊட்டச்சத்து குறைபாடு போதிய அடிப்படை வசதிகள் இன்மை பள்ளிகளில் உள்ள வசதிகளின்மை ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல காரணங்களே என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மாதிரி பள்ளிகளில் போதுமான அளவு அடிப்படை வசதிகளை உருவாக்கி போதிய ஆசிரியர்களை நியமித்து சிறப்பு பயிற்சி வழங்குவது கடினமான பாடங்களை எளிமையாக நடத்திக் கொடுப்பது தொழில்நுட்ப உதவிகளை கையாள்வது ஆய்வகங்களை சிறப்பாக பயன்படுத்துவது இதன் மூலம் மாணவர்களை தொழில்கல்வியில் சேர வைப்பது மாணவர்கள் முற்றிலுமாக தங்களது கல்வி மேம்பாட்டிற்கு அரசு பள்ளியிலேயே சார்ந்து இருப்பது மாதிரி பள்ளிகள் அமைப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் டி.திருநாவுக்கரசு உண்டு உறைவிட பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.மகேஷ்வரன் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

