நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், வழங்கினார்
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 25
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000 இரண்டாம் பரிசு ரூ. 3000 மூன்றாம் பரிசு ரூ 2000 பள்ளி மாணவர்களுக்கு என நடத்த பெறும் பேச்சு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை 2000 வீதம் காசோலையை பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், வழங்கினார்.



இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இரா.அன்பரசி , தமிழ்வளர்ச்சித்துறை பணியாளர்கள் மற்றும் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

