வேதாரணியத்தில் அமரர் சர்தார் அ. வேதரத்தினம் அவர்களின்61 வது ஆண்டு நினைவு நாள் விழா
வேதாரணியம் ஆகஸ்ட் 25
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் குருகுல தந்தை அமரர் சர்தார் அ .வேதரத்தினம் அவர்களின் 61 வது ஆண்டு நினைவு நாள் நேற்று
வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் நடைபெற்றது. குருகுலத்தில் சர்தார் நினைவு மேடைக்கு முன்னால் காலையிலிருந்து மாலை வரை பஜனை பாடல்கள் பாடப்பட்டன.மாலை தாயுமானவர் வித்தியாலயத்திலிருந்து சர்தார் அவர்களின் திருவுருவப்படம் வேதாரண்யத்தில் வீதிவலம் வந்து குருகுலத்தை வந்தடைந்தது.பின்னர் குருகுலத்தில் நினைவுநாள் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை குருகுலத்தில் நடந்த விழாவில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தின் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி அ. வேதரத்னம் வரவேற்புரை ஆற்றினார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் டி கோவிந்தராஜன் தலைமை உரையாற்றினார். விவேகானந்த பள்ளிதாளாளர் கு.பா.இளம்பாரதி சிறப்புரையாற்றினார்



பின்னர் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் ஓய்வு பெற்ற ஆசிரியைகள் சோ. மகேஸ்வரி வெ.சாந்தா
மற்றும் சென்னையில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது தமிழக முதல்வரால் பெற்ற முன்னாள் குருகுலம் மாணவியுமான பா. எழிலரசிக்கும் குருகுலம் அறக்கட்டளை சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இறுதியாக “சர்தார் வேதரத்தினம்” நினைவு நல்லாசிரியர் விருது வேதாரணியம் சரகம் சார்ந்த பள்ளியில் பணியாற்றிய நல்லாசிரியர் வே. சித்திரவேல்( தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஞானாம்பிகா அரசு உதவி தொடக்கப்பள்ளி கருப்பம்புலம் வடகாடு)
வழங்கப்பட்டது.இந்த விழாவில் குருகுலம் பள்ளி ஆசிரியைகள் மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

