வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 3 மாத ஊதியம் இதுவரை கிடைக்காத தால் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம் ஆகஸ்ட் 25
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் 40 பேர்
(ஆண்கள் 29 பேராசிரியர்கள் பெண்கள் 11 பேராசிரியர்கள்) அலுவலகப் பணியாளர்கள் 4 பேர்
கடந்த 3 மாதங்களாக கல்லூரியில் தேர்வு பணி முதலாண்டு மாணவர் சேர்க்கை மற்றும் இரண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்
என தொய்வின்றி வேலை செய்து வந்தாலும்
3 மாதமாக ஊதியம் கிடைக்காததால் குடும்ப செலவிற்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும் இந்த காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் ஒவ்வொரு மாதமும் முறையான ஊதியம் வழங்கும் வரை தொடர்ந்து நடைபெறும் என்றும்
இந்த காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கு.அர்ஜுனன் மற்றும் கலந்துகொள்ளும் பேராசிரியர்கள் தெரிவித்தார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் முறையான ஊதியம் வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

