வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கி வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதம்.
வேதாரணியம் ஆகஸ்ட் 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில்
நேற்று பெய்த கனமழை காரணமாக
இடி மின்னல் தாக்கி மூன்று வீடுகளில் சுவர்களில் தெரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.




புஷ்பவனம்
கிராமத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரது வீட்டின் சிமெண்ட் செட்டில் இடி மின்னல் தாக்கி சுவரும் ஸ்விட்ச் பாக்ஸ் உடைந்து சேதமடைந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் அதிர்ச்சி அடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி,குளிர்சாதன பெட்டி,மின் விசிறி போன்ற மின்சாதனப் பொருள்கள் இடி மின்னல் தாக்கி பழுதடைந்தது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

