தூத்துக்குடி ஆகஸ்ட் 24
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸட் .15 சுதந்திர தினத்தன்று தூத்துக்குடி கின்ஸ் அகாடமி,மாணவர்களுக்கான போட்டி தேர்வு ஒன்றை நடத்தியது.
சுதந்திர போராட்ட காலம் துவக்கம் முதல் இன்றைய நிகழ்வுகள் வரையிலான 75 கேள்விகள் கேட்கப்பட்டு அதில்
அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 75 மாணவர்களுக்கு ரூ.75,000 ரொக்க பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு தேர்வு நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் மாலை கின்ஸ் அகாடமியில் நடந்தது.
தமிழக கைத்தறி முதுநிலை ஆய்வாளர் டி.ரகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பேராசிரியை முனைவர் இ. வாசுகி வரவேற்று பேசினார். கின்ஸ் அகாடமி நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து விழாவிற்கு தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர் திரு. டி. ரகு பேசியதாவது,
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மூன்று முக்கிய விஷயங்களை கடைபிடித்தால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.
முதலாவதாக, மாணவர்கள் சுயஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாக முதலில் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் ஒரே சிந்தனையில் இருக்கும் வகையில் மனதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தொடர்ந்து பத்து நாட்கள் அப்படி மனதை கட்டுப்படுத்த பயிற்சிக்க வேண்டும். அவ்வாறு மனதை கட்டுப்படுத்த பழகினால் படிக்கும் திறன் இரு மடங்காக மாறும். மற்றவர்கள் ஒரு வாரம் கஷ்டப்பட்டு படிக்கும் பாடங்களை நாம் ஒன்றரை மணி நேரத்தில் படித்து விடலாம்.
இரண்டாவதாக மாணவர்கள் தங்கள் கவனத்தை வீணடிக்கும் சக்திகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். செல்போன்
ஒவ்வொரு மாணவனின் முப்பது சதவீத நேரத்தை திருடி விடுகிறது. ஆகவே செல்போன் பயன்பாட்டை மாணவர்கள் பெரிதும் தவிர்க்க வேண்டும்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான வாரன் பஃபெட் ஓரிரு மணி நேரம் மட்டும் வேலை செய்கிறார். அதே நேரம்
மற்றொரு பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஓரிரு மணிநேரம் மட்டுமே தூங்குகிறார். ஆகவே எவ்வளவு நேரம் படிப்பது
என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
இவ்வாறான வழிகளை பின்பற்றி மாணவர்கள் படித்தால் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம். இவ்வாறு ரகு பேசினார்.

பின்பு போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் (65) எடுத்த பி. மகாராஜனுக்கு ரூ.3000, இரண்டாம் மதிப்பெண்கள் (64) எடுத்த
எஸ். மணிகண்டன் , எம்.வெங்கடபதிராஜூ, ஆர். தினேஷ்குமார், ஆர். அய்யப்பன் ஆகியோருக்கு இரண்டாம் பரிசான தலா ரூ.2000
வழங்கப்பட்டது. 63 மதிப்பெண்கள் எடுத்த பி. விஜயக்குமார், பி. விஜய், சே. ராஜநாதன், ஆர்.வான்மதி ஆகியோருக்கு மூன்றாம்
பரிசான ரூ.1000 வீதம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. 62 மதிப்பெண்கள் முதல் 54 மதிப்பெண்கள் வரை பெற்ற 73
மாணவர்களுக்கு தலா ரூ.900 வீதம் வழங்கப்பட்டது. மொத்தம் வழங்கப்பட்ட பரிசுத்தொகை ரூ. 80,700 ஆகும்.
கின்ஸ் அகாடமி மாணவரும் பயிற்றுனரும் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து வருபவருமான ஆர்.சிவகுருநாதன் நன்றி கூறினார்.
கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து இந்த கல்வி நிறுவனம் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு குறிப்பாக அரசு தகுதி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களுக்கு ஊக்கம் அளிப்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

