வேதாரண்யத்தில் பழுதடைந்த
ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில் இயங்கும் நூலகம்.
வேதாரண்யம் ஆகஸ்ட் 24
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பழுதடைந்த ஊனமுற்றோருக்கான தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தில்
இயங்கும் நூலகம். இந்த நூலகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களும் 4000
உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த நூலகத்திற்கு தினமும் பலரும் வந்து புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் படித்து செல்கின்றனர்.இந்த நிலையில் நூலக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது .
மழைக்காலங்களில் நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து புத்தகங்கள் சேதமடைகிறது.கட்டிட வளாகமும் புதர் மண்டி கிடக்கிறது.

இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.இந்த நூலகம் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நூலக கட்டிடத்திற்கான இடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அருகில் இருந்தாலும் அந்த இடத்தில் இதுவரை கட்டிடம் கட்டித் தரப்படாமல் உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் அருகில் நூலகத்திற்கான கட்டிடம் கட்டப்படும் இடத்தில் தமிழக அரசு புதிதாக நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

