நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 280 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம், சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரே மாதிரி ஒரே வண்ணத்தில் புகார் பெட்டி ஒன்று வைத்திட மாண்புமிகு சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் உத்திடவிடப்பட்டுள்ளது. அவ்உத்தரவினை முன்னிட்டு இன்று துறை சார்ந்து வரப்பெற்று மாதிரி புகார் மனு பெட்டி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் பணிபுரியும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும், புகார் மனுக்கள் பெறப்படும் பட்சத்தில் இந்த பிங்நிற புகார் பெட்டிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர், தலைமை அலுவலர் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர் ஆகிய இருவரின் கண்காணிப்பில் திறக்கப்பட்டு பெறப்பட்டுள்ள புகார் மனுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும், பொது மக்களிடம் தெரிவித்திட தகவல் பெறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட சமூக நல அலுவலர் ஏ.தமிமுன்னிசா சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு ; கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

