நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 23 நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகில் மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டியிருப்பு, வல்லவிநாயன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவ மாணவிகள் மேல்நிலைப் படிப்புக்காகவும் அருகில் உள்ள திருக்குவளைக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த கிராமங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்வதற்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருக்குவளைக்கு நடந்து வந்து பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. அவசர காலங்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் சூழலில் ஏழை எளிய கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த கிராம மக்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழக அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் உடனடி நடவடிக்கையாக மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமத்திலிருந்து பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவத்து கழக பொது மேலாளர் கே.எஸ்.மகேந்திரகுமார் துணை மேலாளர் வணிகம் எம்.சிதம்பரகுமார் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர்.இல.பழனியப்பன் வாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன் கோட்டமேலாளர் டி.தமிழ்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

