நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22
நாகப்பட்டினம் மாவட்டம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்.என்.கௌதமன் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டடம் கட்டும் பணி தமிழக அரசின் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.368,50 இலட்சத்திற்கு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் தரைதளத்தில் மட்டும் 807.00 ச.மீ பரப்பளவில் (8683.32 ச.அடி) அமைந்துள்ளது. இத்தரைத்தளத்தில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை ஒன்றும், மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை இரண்டும், மற்றும் தங்கும் அறை -1 என மொத்தம் நான்கு அறைகளுடன் அமையப்பட்டுள்ளது. மேலும் உணவு அருந்தும் அறை, கூட்ட அரங்கு காத்திருப்பு அறை, தாழ்வாரம், பாதுகாவலர் அறை மற்றும் வரவேற்பறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து பொதுபணித்துறை(கட்டடம்) செயற்பொறியாளர் இ.மோகன சுந்தரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உதவி பொறியாளர் எம்.பிரபாகரன் உதவி செயற்பொறியாளர் ஆர்.வேலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

