நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக போதைப் பொருள்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் துவக்கி வைத்தனர்.



பேரணியில் மாணவ மாணவிகளுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம் ,நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர. பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர். நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

