ஏரலில் காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா:
ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஏற்பாட்டில்
50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஏரல் ஆகஸ்ட் 22
தமிழகத்தில் எங்கெல்லாம் பிணங்கள் விழுகிறதோ அங்கெல்லாம் மத சாதி அரசியலை புகுத்துகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. என ஏரலில் நடைபெற்ற காங்கிரஸ் முப்பெரும் விழா விழாவில் மாணிக்கம் தாகூர் எம்பி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, 75வது சுதந்திர பவள விழா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா நடந்தது.
இதில் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகையும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு உதவித் தொகையும் நலத்திட்ட உதவிகள் என 300க்கும் மேற்பட்டவருக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய எம் பி மாணிக்கம் தாகூர், பாஜகவில் உள்ள தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் எங்கெல்லாம் பிணங்கள் விழுகிறதோ எங்கெல்லாம் உயிரிழப்புகள் நடக்கிறதோ எங்கெல்லாம் தற்கொலை நடக்கிறதோ அங்கு சென்று மத அரசியலிலும் ஜாதி அரசியலிலும் ஈடுபடுகிறார். மேலும் கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வை கேட்டதற்கு எங்களுக்கு பதில் முறையாக அளிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு ஜால்ரா அடிப்ப அவர்களையே அவர்கள் வைத்து கூட்டத்தொடரை நடத்த நினைக்கின்றனர் அது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருக்கும் வரை நடக்காது என்று அவர் தெரிவித்தார்.

