வேளாங்கண்ணி, நாகூருக்கு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் தமிழ்நாடு புதுவை கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ்
வருகை
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ்
வருகை புரிந்தார்.
அவர் நாகூர் தர்க்கா மற்றும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்றார்.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவ்ஷாத் இல்லத்தில் கட்சிகளுடன் கலந்துரையாடினார்.



இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், காங்கிரஸ் விவசாய அணி மாநில செயலாளர் மீரா உசேன், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் மக்சூத் சாஹிப், நாகை நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட மனித உரிமை துறை தலைவர் தியாகு என்கிற தியாகராஜன், நகர்மன்ற உறுப்பினரும் நாகை நகர காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் முஹமது நத்தர், காரைக்கால் மாவட்ட சிறுபான்மை துறை தலைவரும் சமூக சேவகருமான சோழ சிங்கராயர், புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் தேவதாஸ் காந்தி, நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்புதீன் மரைக்கார், யூசுப் சாஹிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

