தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!!
தூத்துக்குடி திராவிட முன்னேற்றக்கழக 15வது உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் கிளைச்செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை நடைபெற்று முடிந்துள்ளது. அதில் தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகிகள் அறிவிப்பு தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கிழக்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட சரவணக்குமாருக்கு துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலி;க்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மை சேவியர், கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், கிளைக்கழக செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் , பொதுமக்கள், திமுக முன்னோடிகள் திமுக பல்வேறு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து சால்வை மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்று அந்த கிராம பகுதிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை திறம்பட செய்து மக்களால் பாராட்டு பெற்று வந்த சரவணகுமார் திமுக கட்சி உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் அரவணைத்து செயல்படக் கூடியவர் என்பதால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சரவணகுமார் பரிந்துரை செய்தார். இவர் ஒன்றிய செயலாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளையூரணி ஒன்றியத்திற்குட்பட்ட திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
செய்தி தொகுப்பு எம் .ஆத்தி முத்து.

