நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 20
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்க நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் சார்பில் தூய்மை பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஆணைப்படி, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறங்கள், ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன், பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கை தரத்திற்கு இன்றியமையாதது என்பதால் தற்போது ஊராட்சிகளில் சுகாதாரம், திட திரவ கழிவுகள் மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு முறையான வசதி இல்லாத கிராமப்புறங்களில் பொதுசுகாதாரம், குழந்தை இறப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால் ஒருங்கிணைந்த தீர்வுகாண்பதற்கு நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தின் சார்பில் 20.08.2022 இன்று துவங்கி 02.10.2022 வரை நடைபெறுகிறது. 44 நாட்கள் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமபுறங்களில் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை மேம்படுத்திட சுகாதர நடைமுறைகள் மேம்;படுத்துதல், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை தடைசெய்தல், நீர்பாதுகாப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் மாபெரும் தூய்மை பணி மேற்கொள்ளல் 20.08.2022 to 2.09.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீர் சுகாதாரம் மற்றும் கழிவுப்பொருள்களை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 27.08.2022to02.09.2022 வரை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக வீடுதோறும் நீர் சுகாதாரம் மற்றும் கழிவுப்பொருள்களை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 03.09.2022 to 16.09.2022 வரை ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு பதிலியாக மாற்றுப்பொருள்கள் பயன்படுத்துதல். மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 17.09.2022 to 23.09.2022 வரை தூய்மை மற்றும் பசுமை கிராமங்களை உருவாக்குதல் 24.09.2022 to1.10.2022 வரை ஆகிய தேதிகள் வரை விழிப்புணர்வு மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா தேவூர் ஊராட்சி மன்ற தலைவர் வைதேகிராசு திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் எல்.பழனியப்பன் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.ரேவதி கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிசெல்வன் வட்டாச்சியர் ராஜ்குமார், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.தியாகராஜன், ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

