வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
வேதாரணியம் ஆகஸ்ட் 19
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட மறைஞாயநல்லூர் பொன்னன் காட்டில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இன்று வரை மின்சார வசதி, சாலை வசதி, குடிதண்ணீர் வசதி இல்லாத குறித்து வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் T.நாராயணன்,K.பாஸ்கர் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.வேதாரணியம் துணை வட்டாட்சியர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

