நாகப்பட்டினம் மாவட்டம் எரிபொருள் சிக்கனம், ஆரோக்கியமான சமுதாயம், இயற்கை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவரின் மிதிவண்டி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 18 நாகப்பட்டினம் மாவட்டம் எரிபொருள் சிக்கனம், ஆரோக்கியமான சமுதாயம் உருவாக மிதிவண்டி, இயற்கை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவரின் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். நாகை ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் மணிமாறன் ஆட்டோ டிரைவர், இவரது மகன் எம்.ஹரிஹரமாதவன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். புவி வெப்பமயாமாவதை தடுக்கவும், இயற்கை பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், ஆரோக்கிய சமுதாயம் உருவாக மிதிவண்டி என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை, சைக்கிளில் பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
ராமநாதபுரம், கன்னியாகுமரி, தர்மபுரி, திருவண்ணாமலை வழியாக வழியெங்கும் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி 20 நாட்களில், 2 ஆயிரம் கி.மீ கடந்து செப்டம்பர் 6ஆம் தேதி நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நிறைவடைகிறது. தற்போது தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த நாகையில் இருந்து நேற்று ஹரிஹரமாதவன் மேற்கொண்ட பிரச்சார பயணத்தை அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

