வேதாரணியம் கஸ்தூரிபா கன்யா குருகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
வேதாரணியம் ஆகஸ்ட் 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா கன்யா குருகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
பகவான் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.அதில் கிருஷ்ண அவதாரம் சிறப்பு வாய்ந்தது தேவகியின் கருவில் உதித்த முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்அவர் பிறக்கும் முன்பே அவரை அழிக்க காத்திருந்தார் அவரது தாய்மாமன் கம்சன் அதையும் மீறி ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்தது.
உலகத்தில் அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மண்ணுலகில் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது


அந்த வகையில் வேதாரண்யத்தில் கஸ்தூரிபா கன்யா குருகுலத்தில் இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.முதலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கிருஷ்ணர் வழிபாட்டு பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர். பள்ளி தாளாளர் கயிலைமணி A.வேதரத்தினம் வரவேற்புரையாற்றினார்.கத்திரிபுலத்தை சேர்ந்த எஸ் .சாம்பசிவம் தலைமை உரையாற்றினார்.அச்சக ஊழியர் விஜயா சிறப்புரையாற்றினார்
பின்பு கஸ்தூரிபா கன்யா குருகுல மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இறுதியில் பள்ளி ஆசிரியை
கற்பகவள்ளி நன்றி கூறினார்.
இந்த விழாவில் கஸ்தூரிபாகன்யா குருகுல ஆசிரியைகள், மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

