நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 18 நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்த உறுதி மொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்பெ.பெரியசாமி கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர்.க.ப. அருளரசு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.இராமன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

