வேதாரண்யத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண் கருத்தரங்கம்.
வேதாரணியம் ஆகஸ்ட் 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை
நடத்தும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை
மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் பற்றிய வேளாண் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்தக் கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகீலா தலைமை ஏற்கவும் வேதாரணியம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின்,
வேளாண் இணை இயக்குனர் அகண்ட ராவ் முன்னிலை வகிக்கவும்
வேளாண் துணை இயக்குனர் வெங்கடேசன்,துணை இயக்குனர் கருப்பையா
ஆகியோர் கலந்துகொண்டனர்.வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை
மீன்வளத்துறை, கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் வந்திருந்த விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் பற்றி பயிற்சி அளித்தனர்.




இந்த வேளாண்மை கருத்தரங்கில் வேளாண்மாதிரி நெல் வகைகள்,
மாதிரி இடுபொருள்கள்,மாதிரி உர வகைகள்,
வேளாண் பயிற்சி இயந்திரங்கள் ஆகியவை பார்வைக்கு வைத்திருந்தனர். இந்த வேளாண் கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

