வேளாங்கண்ணியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் வெட்டிக்கொலை.
வேளாங்கண்ணி ஆகஸ்ட் 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தெற்கு பொய்கைநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி மகன் மனோகரன்
வயது 40 இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் நின்று கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர்.

வெட்டுப்பட்ட மனோகர்
சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து நாகை மாவட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.வேளாங்கண்ணி காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

