கருப்பம்புலத்தில் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் முதியவர் கொலை.
வேதாரண்யம் ஆகஸ்ட் 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர்
இரத்தினசபாபதி ( வயது 70)
அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.ஒரு மகன் இறந்த நிலையில் ஒரு
மகன் முத்துப்பேட்டையில் வசித்து வருகிறார். மகள் திருமணமாகி தன் குடும்பத்துடன் தகட்டூரில் வசித்து வருகிறார். மனைவி இறந்த நிலையில் தற்போது இவர் மட்டும் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்தார்.



இந்நிலையில்
வீட்டின் வாசலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் தூங்கிய நிலையில் படுத்திருந்துள்ளார். படுத்து இருந்ததை பார்த்து தினந்தோறும் அவரிடம் பால் வாங்க வரும் பால் முகவர்இன்னும் அவர் எழுந்திருக்காததை பார்த்து சந்தேகம் அடைந்து அருகில் வந்து பார்த்தபோது காயங்களுடன் இருந்தது கண்டு அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வேதாரண்யம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவ்வப்போது இந்த வீட்டில் டிவி, மோட்டார் என திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. முதியவரை கொலை செய்து வீட்டில் உள்ள பொருட்கள் ஏதும் திருடப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

