நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று ஆலங்குடி, கோவில்பத்து, கோடியக்கரை, அக்கரைப்பேட்டை, நாகூர், ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 17 நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் மன்னார்குடி.ஆர்.பி.ராஜா அவர்கள் தலைமையில் போளுர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்..எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , தளி சட்டமன்ற உறுப்பினர் டி.இராமசந்திரன் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தி.சதன் திருமலைக்குமார் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்பரமணியன் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜ~) மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் நாகப்பட்டினம் ஜெ.முகமது ஷா நாவாஸ் ஆகிய உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் பி.பாலசுப்பரமணியன் துணை செயலாளர் க.லோ.சிவகுமாரன் ஆகியோர்கள் கொண்ட குழு உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் இன்று தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடி, கோவில்பத்து, வேதாரண்யம் ஒன்றியம், கோடியக்கரை, நாகப்பட்டினம் நகராட்சி அக்கரைப்பேட்டை பாலம், நாகூர் ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயப்பெருமக்களின் நலனுக்காக ஆள்பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவினை குறைத்திடுவதற்கு நவீன தொழில் நுட்பங்களை வேளாண்மையில் கொண்டுவரும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோன்கள் மூலம் உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவை தெளிப்பதற்கு ஏதுவாக பயன்படுத்தப்படும் செய்முறை விளக்கத்தினை பார்வையிட்டு, கோவில்பத்து கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து, வேதாரண்யம் ஒன்றியம் கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயம் மற்றும் சாலையினை மேம்படுத்துதல் தொடர்பாகவும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி சாலை அக்கரைப்பேட்டையில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைப்பெறுவதையும், நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நாகூர் கடற்கரையினை மேம்படுத்துதல் தொடர்பாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் மாற்றுதிறனாளி நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.21,100 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள், காதொலிக்கருவினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் சார்பில் ரூ.28,000 மதிப்பீட்டிலான 28 பயனாளிகளுக்கு மாற்றுதிறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை போன்றவைகளையும், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 5 பயனாளிகளுக்கு ரூ.47,400 மதிப்பீட்டிலான நிதியுதவி, தையல்இயந்திரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,803 மதிப்பீட்டிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தலா.3 தென்னங்கன்றுகளையும், வாழந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.3,22,500 மதிப்பீட்டிலான நலத்திட்டங்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைசார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.25,000 மதிப்பீட்டிலான கத்திரி, மிளகாய், வெண்டை, போன்ற குழித்தட்டு நாற்றுகள், வருவாய்துறை சார்பில் 106 பயனாளிகளுக்கு ரூ.14,84,000 மதிப்பீட்டிலான விலையில்லா வீட்டுமனை பட்டா, சமூக நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.18,000 மதிப்பீட்டிலான முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை இரசீது, வேளாண்மைபொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.8,61,724 மதிப்பீட்டிலான பவர் டில்லர், வைக்கோல் கட்டும் இயந்திரம், நெல் நாற்று நடவு இயந்திரம் போன்றவைகள் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ28,18,527 மதிப்பீட்டிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைகமுகங்கள் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை போன்ற அனைத்து துறை அரசு அலுவலர்களுடான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.




இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் மாவட்ட வன உயிரின காப்பாளர் திரு.யோகேஷ்குமார் மீனா மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி, நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜ்குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் ந.முருகேசன், செல்வி. ஜெயராஜ பௌலின், நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

