வேதாரண்யத்தில் வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் .
வேதாரணியம் ஆகஸ்ட் 16
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓரடியம்புலம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை வெட்டி விற்ற நபர்களை
காவல்துறையினர் கைது செய்யாததை கண்டித்தும்
வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் மற்றும் நாகை மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர் ஓ. எஸ் மணியன் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேதாரணியம் ஒன்றிய மேற்கு செயலாளர் சுப்பையன்
தலைஞாயிறு செயலாளர்கள் அவ்வை பாலசுப்ரமணியன்,சௌரிராஜன் வேதாரணியம் நகரச் செயலாளர் நமச்சிவாயம் மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இளவரசி மற்றும் அதிமுக ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் அதிமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

