வேதாரண்யத்தில் தனியார் உணவகத்தில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் கசிவால் சமையல் கூடம் எரிந்து சாம்பலானது.
வேதாரண்யம் ஆகஸ்ட் 15
நாகை மாவட்டம் வேதாரண்யம் மேல மடவிளாகம் வீதியில் தனியார் உணவக சமையல் கூடத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் கசிவால் தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரை எரிந்து முற்றிலும் சாம்பலானது .தகவல் அறிந்து விரைந்து வந்த வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றிய போது வாடிக்கையாளர்கள் இரவு உணவு அருந்தி கொண்டிருந்தனர் . DSP முருகவேல் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினர் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இருப்பினும் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ எரிவதை அணைக்க முற்படாமல் கேஸ் சிலிண்டர் வெடித்து விடும் என்ற அச்சத்தில் அனைவரும் வெளியேறியதால் தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீவிபத்தின் காரணமாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது .இத்தீ விபத்தால் உணவகத்தில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சாம்பலானது.



செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

