வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில்
திமுக இளைஞர் அணியின் சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
வேதாரணியம் ஆகஸ்ட் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் 13.08.2022 ல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நாகை மாவட்ட செயலாளர் கௌதமன்
தலைமை ஏற்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம், வேதாரணியம் நகரமன்ற தலைவர் மா.மீ புகழேந்தி,
வேதாரணியம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் மற்றும் வேதாரணியம் தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் எம்.எம். அப்துல்லா
மாநில சுயாட்சி என்ற தலைப்பில்
பேராசிரியர்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கருத்துரை வழங்கினார்கள். இக்கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

