நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நாகூரில் 76 ம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றும் விழா.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 15
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் தர்கா அலங்கார வாசல் முன்பு நடைபெற்ற
76 ம் ஆண்டு சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்வில் நாகை மாவட்ட அமைப்பு பொது செயலாளர் N. முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார் நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் சர்புதீன் மரைக்கார் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் மச்சூத் சாஹிபு, மாவட்ட மனித உரிமை துறை துணைத்தலைவர் உதயா, சிறுபான்மை துறை நகர செயலாளர் யூசுப் சாஹிப், வீடியோ சேத்தான் ,சகாபுதீன் முன்னிலை வகித்தனர்.

மாநில விவசாய அணி செயலாளர் நாகை S.மீரா உசேன் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் A.R நௌசாத் சிறப்புரையாற்றினார்கள். மனித உரிமை துறையின் மாவட்ட தலைவரும் நகரமன்ற உறுப்பினருமான தியாகராஜன் தேசிய கொடியை ஏற்றினார். இநிகழ்சியில் மக்கள் நல சங்க தலைவர் ஜாலால், சமூக ஆர்வலர் அப்துல் சலாம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் STD சாதிக் நன்றி கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல் விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

