வேதாரண்யத்தில் 76 வது சுதந்திர தினத்தை ஒட்டி நள்ளிரவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
வேதாரணியம் ஆகஸ்ட் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக கட்டிட வளாகத்தில் 76 வது சுதந்திர தினத்தை ஒட்டி நள்ளிரவில் 12 மணி அளவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உப்பு சத்தியாகிரக போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினத்தின் பேரன்
கயிலை மணி A.வேதரத்தினம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தினர் மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு நடந்த நிகழ்வில் வேதாரண்யத்தில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

