தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில்
சுதந்திர தின பவள விழா கோலாகலமாக கொண்டாட்டம்:
குருவானவர் தமிழ்ச் செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
செய்தார்.
தூதத்துக்குடி.ஆக.16
தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் தேசிய ஒருமைப் பாட்டு உறுதிமொழி ஆகிய நிகழ்ச்சிகள் திருமண்டல அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
குருவானவர் செல்வ குமார் ஆரம்ப ஜெபம் செய்தார்.
திருமண்டல உப தலைவரும், திரவியபுரம் சேகர தலைவருமான குருவானவர் தமிழ்ச் செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
திருமண்டல “லே செயலரும், சாயர்புரம் போப் கல்லூரியின் தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏறெடுத்தார்.
திருமண்டல பொருளாளர் மோகன் அருமை நாயகம் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
திருமண்டல மேல்நிலை, உயர்நிலை, சிறப்பு பள்ளிகளின் மேலாளரும், நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி தாளாளருமான பிரேம் குமார் ராஜாசிங் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

திருமண்டல துவக்க, நடுநிலை பள்ளிகளின் மேலாளரும், கிருஷ்ண ராஜ புரம் வட்ட கோயில் சேகர மன்ற தலைவருமான குருவானவர் ஜேஸ்பர் நிறைவு ஜெபம் செய்தார்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினரும், நாசரேத் ஜெயராஜ்- அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லுரியின் தாளாளருமான ஜாண்சன்,
பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலய ஐக்கிய அணியின் தலைவரும், விக்டோரியா சி.பி.எஸ்.இ . பள்ளியின் தாளாளருமான இன்ஸ்டீன், மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் , சேகர மன்ற உறுப்பினர்கள், திருமண்டல அலுவலக பணியாளர்கள், மற்றும் திரளான திருச்சபையார் கலந்து கொண்டனர்.
சாரண- சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவரும், நல்லாசிரியருமான எட்வர்ட் பால் கொடி அணிவகுப்பு மரியாதை செய்தார்.
செய்தி தொகுப்பு
எம் .ஆத்தி முத்து போலீஸ் செய்தி

