வேதாரண்யத்தில் 76 வது சுதந்திர தினத்தை ஒட்டி அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது .
வேதாரண்யம் ஆகஸ்ட் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டன. வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் இதில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரணியம் நகராட்சி அலுவலகத்தில் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம்
மற்றும் நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.வேதாரணியம் நகராட்சியில் சிறப்பாக பணி செய்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.



பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வேதாரணியம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் கே சுரேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர் .வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கமலா அன்பழகன்
ஏற்றி வைத்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

