நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 15
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை தொடர்ந்து அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராமசபாக்கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற
இக்கூட்டத்தில மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபா கூட்டமாகும். இதுவரை நாம் அடைந்திருக்கின்ற பயன் மேலும் பயன் பெற இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தை பொருத்தவரை மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்திக்கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பு.

இந்த கிராமசபா கூட்டத்தில் 16 கூட்டபொருள்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விவாதம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களை அசுத்தம் செய்யாதிருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பிளாஸ்டிக் பொருட்களை கிராம ஊராட்சிகளில் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவரத்தினை குறிப்பிட வேண்டும். ஊராட்சி பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும். கிராம ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மூலமாக குழந்தைகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் வேண்டும். பள்ளி மாணவர்கள் கைபேசியில் இணையதள விளையாட்டுகள் விளையாடும் பொழுது ஏற்படும் கால விரையம் மற்றும் பொருள் விரையம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இக்கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

