நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 76-ஆவது சுதந்திர தின
விழாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, 110 பயனாளிகளுக்கு
ரூ.7,41,07,12 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், வழங்கினார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 15
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் 15.08.2022 நடைபெற்ற 76-ஆவது சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டு 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 இலட்சத்து 7 ஆயிரத்து நூற்று இருபத்து ஆறு மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திர தின விழாவில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேசிய தகவலியல் மையம் தன்னார்வலர்கள் என மொத்தம் 143 நபர்கள் மற்றும் காவல்துறை சார்பில் 49 நபர்கள் என மொத்தம் 192 நபர்களுக்கும் பதக்கம், நினைவுப்பரிசு, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிக்கு ரூ.14,000 மதிப்பிலான பார்வைற்றோருக்கான எழுத்து உருபெருக்கி மற்றும் மாதாந்திர பாரமரிப்பு உதவி தொகை, சமூக பாதுகாப்புத்திட்டம் சார்பில் 38 பயனாளிக்கு ரூ.38,000 மதிப்பிலான விதவை உதவித்தொகையும், கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1,40,000 மதிப்பிலான ஆவாஸ் பிளஸ் இலவச வீட்டு மனைப்பட்டா ஆகிய நலத்திட்டங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பீட்டில் கல்வி உதவி தொகையினையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.46,700 மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் இலவச தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், சுகாதாரத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.3,800 மதிப்பீட்டில் மக்களைத்தேடி மருத்துவம் மற்றும் கண் கண்ணாடி ஆகிய நலத்திட்ட உதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.18,64,610 மதிப்பீட்டில் இலவச பித்தளை தேய்ப்பு பெட்டி மற்றும் இலவச தையல் இயந்திரம், சுய தொழில் செய்ய கடன் உதவி ஆகிய நலத்திட்ட உதவிகளையும், ஊரக புத்தாக்கத் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,48,000 மதிப்பீட்டில் ஆடு மற்றும் மாவடு வளர்ப்பு ஆகிய நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.24,40,000 மதிப்பீட்டில் வங்கி கடன் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.90,00,000 மதிப்பீட்டில் கண்ணாடி நாரிழைப்படகு இயந்திரம், வலை மற்றும் குளிர்காப்பு பெட்டி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகு ஆகிய நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,20,00,000 மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் வேலைபாய்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 5 பயனளிகளுக்கு ரூ.15,750 மதிப்பீட்டில் கன்றுபெட்டகம் வழங்கும் திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பயனளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டில் கத்தரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், காய்கறி விதைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனளிகளுக்கு ரூ.14,150 மதிப்பீட்டில் யுவுஆயு திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையில் தார்பாய் விநியோகம் மற்றும் தென்னங்கன்று விநியோகம், தெளிப்பான் விநியோகம், முன்னுரிமை அடிப்படையில் கைத்தெளிப்பான, முன்னுரிமை அடிப்படையில் தென்னை மரம் ஏறும் கருவி ஆகிய நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 6 பயனளிகளுக்கு ரூ.38,08,724 மதிப்பீட்டில் நாற்று நடவு இயந்திரம் 4 மற்றும் 6 வரிசை, வைக்கோல் கட்டு கட்டும் கருவி, பவர்டில்லர் மற்றும் கூட்டு அறுவடை இய்ந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ துறை சார்பில் சார்பில் 5 பயனளிகளுக்கு ரூ.41,35,392 மதிப்பீட்டில் லோடு வாகனம் மற்றும் டிராக்டர் ஆகிய நலத்திட்ட உதவிகளையும், என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 இலட்சத்து 7 ஆயிரத்து 126 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்பெ.பெரியசாமி, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் கே.யோகேஷ்குமார்மீனா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)இராமன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

