வேதாரணியத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திர தின பாதயாத்திரை.
வேதாரணியம் ஆகஸ்ட் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நகர வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் INTUC உப்பு தொழிலாளர்கள் சங்கம்
B & D உப்பு தொழிலாளர்கள் சங்கம்
இணைந்து இந்திய சுதந்திரம் அடைந்து
75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த பாதயாத்திரையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி வி ராஜேந்திரன் துவக்கி வைத்து பாதயாத்திரை முடியும்வரை நடந்து வந்தார். இந்தப் பாத யாத்திரை வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பிலிருந்து துவங்கி வேதாரணியம் நான்கு வீதிகள் வழியாக வந்து வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக கட்டிடத்தில் நிறைவுபெற்றது. உப்பு சத்தியாகிரக கட்டடத்தில் இருந்த இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம் பிள்ளை தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த பாதயாத்திரையில் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ் ,நகர தலைவர் அர்ஜுனன், முன்னாள் நகர தலைவர் வைரவன்,
காங்கிரஸ் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ பால்ராஜ்,
முன்னாள் வட்டாரத் தலைவர் ஜெகநாதன்
மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,
நகர காங்கிரஸ் துணைத்தலைவர் மையா ரபிக் , வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சக்கரபாணி, வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்சி அப்சர் உசேன் ,INTUC உப்பு தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் தங்கமணி,
செயலாளர் சேகர், வெங்கட் ,செல்வகுமார், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ராகுல், இளைஞரணி சட்டமன்றத் தலைவர் ஆப்கான்,தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தலைவர் அப்துல் சலாம்,
மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சத்யகலா ,
மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா, நகர மகளிர் அணித் தலைவர் ரத்னமாலா,
மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த தமயந்தி
வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை
மற்றும் அனைத்து காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
.செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

