கொடைக்கானல் ஆகஸ்ட், 14
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம் உள்ள பதக்கங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு
தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு
முதல்வர் பதக்கம் வழங்க உள்ளதாக 15 அதிகாரிகள் பெயர்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து
, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியை பாராட்டி சிறந்த பொது சேவைக்கான முதலமைச்சரின் பதக்கங்கள், புலன் விசாரணை பணியை பாராட்டும் வகையில் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சுமதி அவர்கள் தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணி பதக்கங்கள்
பெறுகிறார். காவல் ஆய்வாளர் சுமதி பணியாற்றிய இடங்களில் எல்லாம் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று இருந்தார். பொதுமக்களின் புகார் மனுக்களை கனிவோடு பெற்றுக் கொண்டு நடுநிலையோடு விசாரணை செய்யும் அதிகாரியாக இவர் செயல்பட்டு வந்ததால் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புபணி பதக்கங்களை நாளை பெறுகிறார். இதனை அறிந்து கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் பலரும் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி தொகுப்பு:
M.மணிகண்டன்
போலீஸ் செய்தி (கொடைக்கானல் தாலுகா)

