வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) 75வது சுதந்திர தின விழா.
வேதாரணியம் ஆகஸ்ட் 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) 75வது சுதந்திர தின விழா தொடக்க நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி கோவிந்தராஐஜுலு தலைமை வகித்தார்.
வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.மேலும் முன்னாள் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர்கள் அ.நாகூரான்,M.S. ராகவன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம் நிஷாந்தி துணைத் தலைவர் உமா மகேஸ்வரி,
வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் அம்சவள்ளி கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக
பள்ளி தலைமை ஆசிரியர் புயல் சு.குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இறுதியில் பள்ளி ஆசிரியை கி.சாந்தி அனைவருக்கும் நன்றி கூறினார் .
இந்த நிகழ்வில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

