நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 12 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று (12.08.2022) வழங்கினார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நாவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 33 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.7,40,000 மதிப்பிலான காசோலை வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் கனிமவள அறக்கட்டளை அலுவலகத்தின் வாயிலாக 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,400 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படுகிறது. நாகப்பட்டினம் இணை பதிவாளர்கூட்டுறவுத்துறை வாயிலாக 16 நபர்களுக்கு ரூ.7,25,000 மதிப்பிலான காசோலை வழங்கப்படுகிறது. மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக 60 நபர்களுக்கு ரூ.15.00 இலட்சத்துக்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 109 பயனாளிகளுக்கு ரூ.30,37,400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் வ.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு. டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

