வேதாரண்யத்தில் பாரத சுதந்திர தின பவள விழா
வேதாரணியம் ஆகஸ்ட் 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பிலும் மற்றும் அனைத்து சாரார் ஒருங்கிணைந்து நடத்திய பாரத சுதந்திர தின பவளவிழா வேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் நடைபெற்றது .இந்த விழாவிற்கு கு.ப. இளம் பாரதி தலைமை ஏற்கவும்,சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவர் எஸ் கார்த்திகேயன் கலந்து கொண்டார். கயிலை மணி ஏ வேதரத்தினம், சாமி செட்டியார்,
A.1. பாலு ,சிவகுமார்,கண்ணுசாமி, கிரிதரன்,வசந்தி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவும்,
ஜி முரளி, டி ஆர் தர்மராஜ் ,நாகராஜ் ,T.சுதாகர் ஜி ,நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் ,
மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் நடுவராக
தவபாலன்,நல்லாசிரியர் செல்வராஜ்,
சித்திரவேல் இருந்தனர்.




முன்னதாக காலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி,அதன் பிறகு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கெளரவித்தல்,இந்த நிகழ்விற்குப் பின் வேதாரணியம் பகுதிகளான 75 பாரம்பரிய தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கான பவளமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் எஃப்எம் அன்பு தலைமையிலான பட்டிமன்றம்
பட்டிமன்றம் முடிந்த பிறகு சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் சுதந்திர தின பவள விழா குழுவினர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

