நாகப்பட்டினம் முதல் கடற்கரைச் சாலை புனித மாதரசி அன்னை ஆலய கொடியேற்ற திருவிழா.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 12
நாகப்பட்டினம் முதல் கடற்கரைச் சாலை புனித மாதரசி அன்னை திருத்தல ஆலய கொடியேற்ற திருவிழா 11.08.2022 மாலை நடைபெற்றது. மறை வட்ட அதிபர் பங்குத்தந்தை ஜீ.வி .பன்னீர்செல்வம் திருப்பலி யை நடத்திவைத்தார்.


இத்திருவிழா 21. 8. 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியிறக்க திருப்பலியுடன் நிறைவுபெறும். வரலாற்று சிறப்புமிக்க புனித மாதரசி அ ன்னை ஆலயம் நாகைப்பட்டினத்தில் பத்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மாலுமிகாளால் கட்டப்பட்டது. ஐந்து நூற்றாண்டுகளாக இவ்வாலயம் கிறிஸ்துவத்தின் ஓர் உன்னத அடையாளமாகவும், கன்னி மரியாள் தன் திருமகன் வழியாக செய்யும் அற்புதங்களின் அடையாளமாகவும் அழியா வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகிறது. இவ் விழாவில் பங்கு இறைமக்கள் மற்றும் ஏராளமான
கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

