நாகப்பட்டினம் ஆகஸ்ட் 11
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா குழு உறுப்பினர்களான பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கீழ்வேளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஜெயகுமார், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் ஆகியோர் இன்று வேளாங்கண்ணி, சீயாத்தமங்கை, தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடலோர பேரிடர் அபாயக் குறைப்புத் திட்டம் தொகுப்பு -7-ன் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் சூறாவளி, புயல், வெள்ளம், சுனாமி, மற்றும் பல இயற்கைப் பேரிடர் காலங்களில் இயற்கை ஆபத்துகள் மூலம் ஏற்படும் பேரிடரைக் குறைக்கும் நோக்கத்துடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதிக்கு உயர் மற்றும் தாழ் அழுத்த மேல்நிலை மின் விநியோகத்தை புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி அனைத்துறை ஒத்துழைப்புடன் நிறைவு பெற்றுள்ளது.

கடலோர பேரிடர் அபாயக் குறைப்புத் திட்டம் தொகுப்பு-7ன் விபரங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதிக்கு தரை வழி மின் பாதை அமைக்கும் பணிக்கு மேல்நிலை மின் விநியோகத்தை நிலத்தடி (தரை வழி) புதை வட மின் பாதை அமைப்பாக மாற்றுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பாலிகேப் மும்மை குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து மொத்த ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் திட்ட மதிப்பு: ரூ.58.85 கோடி ரூ.62.14 கோடியாக திருத்தப்பட்ட மதிப்பு பயன் பெறும் பகுதிகள்வேளாங்கண்ணி நகர் பகுதி, ஆலய பகுதி, செருதூர், கிழக்கு கடற்கரை சாலை, சுனாமி நகர், பூக்காரத் தெரு, கிராமத்து மேடு, சிவன் கோயில் மற்றும் கீச்சாங்குப்பம் ஆகிய பகுதிகள் பயன் பெறும்.

அதனை தொடர்ந்து, திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை டோரண்ட் குழாய் அமைத்து சமையல் எரிவாயு வழங்கும் நிறுவனத்தை பார்வையிட்டு, தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் சார்பில் ரூ.11,000 மதிப்பீட்டிலான 11 பயனாளிகளுக்கு மாற்றுதிறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, போன்றவைகளையும் சுகாதார துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு மாடு வளர்ப்பிற்கான ரூ.3,28,800 மதிப்பிலான காசோலையினையும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி சேமிப்பு பத்திரம், திருநங்கை அடையாள அட்டையினையும், தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.23,05,577 மதிப்பீட்டிலான டிராக்டர், லோடுவீக்கில் போன்றவைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,745 மதிப்பீட்டிலான தார்ப்பாய், விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், தென்னங்கன்று போன்றவைகளையும் மாற்றுதிறனாளி நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.45,250 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள், வருவாய்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா போன்றவைகள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.28,44,372 மதிப்பீட்டிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜ்குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன், செல்வி. ஜெயராஜ பௌலின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

