வேதாரண்யத்தில் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு
வேதாரணியம் ஆகஸ்ட் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ரூபாய் 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேதாரணியம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
மற்றும் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் வேதாரண்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் வேதாரணியம் உட்கோட்டகாவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல்,வாய்மேடு ஆய்வாளர் கன்னிகா, வேட்டைக்காரனிருப்பு காவல்துறை துணை ஆய்வாளர் தேவசேனாதிபதி, கோடியக்காடு வனத்துறை அதிகாரி அயூப்கான் மற்றும் வேதாரணியம் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

