வேதாரண்யத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 6 ஆயிரம் தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி.
வேதாரண்யம் ஆகஸ்ட் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில்
திருப்பூர் பிரித்வி இன்னர்வேர்,SD இன்டர்நேஷனல் திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் வேதாரணியம் ரோட்டரி சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் உள்ள இருபத்தி ஒரு வார்டுகளுக்கும் 6000 தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி,நகராட்சி ஆணையர் ஹேமலதா,
நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம்,
நகராட்சி துணைத்தலைவர் மங்களநாயகி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,வேதாரணியம் ரோட்டரி சங்க தலைவர் செந்தில், சாசன தலைவர் கேடிலியப்பன், முன்னாள் தலைவர்கள் புயல் குமார், செந்தில் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கதலைவர் மற்றும் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

