வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில்
தீ விபத்து லட்சக்கணக்கான பொருள்கள் சேதம்.
வேதாரணியம் ஆகஸ்ட் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இன்று காலை
லட்சுமணன் தகப்பனார் பெயர் நடராஜன்
பண்டாரத்தான்காடு தேவர்புரம் புஷ்பவனம் என்ற இடத்தில்
அவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்து விட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை.


வீட்டிலிருந்த 15 பவுன் நகை, பிரிட்ஜ், ரொக்கப்பணம் 60,000 ,மரக்கட்டில், மர பீரோ மற்றும் பல ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விட்டது .சேத மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

