வேதாரண்யத்தை அடுத்த புஷ்ப வனத்தில் வேன் -இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பரிதாப சாவு.
வேதாரணியம் ஆகஸ்ட் 7
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்திலிருந்து செம்போடை கிராமம் நோக்கி சென்ற வேன்மீது செம்போடையிலிருந்து புஷ்பவனம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த கணேஷ் என்பவர் வேன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.


அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர். இறந்தவர் புஷ்பவனம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் 23 வயதான கணேஷ் என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

