
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் தொகுப்பூதியத்தை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கி வாழ்வளித்த வள்ளல் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காவது நினைவு நாளில் அவருடைய நினைவு இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆசிரியர்- அரசு ஊழியர்களின்நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி நமது காவல் தெய்வமாக இன்றும் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து வரும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை நன்றியோடு நினைவு கூறப்பட்டது. நம் பேரியக்கத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்று பெயர் சூட்டி நம் பேரியக்கம் இன்று தமிழகத்தின் முதன்மை சங்கமாக திறம்பட செயலாற்ற காரணமாக இருந்துவரும் கருணை உள்ளத்தின் வாழ்த்துகளையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார். உடன் மாநில அமைப்பு செயலாளர் செ.இரமேஷ் அவர்கள் மதுரை மாவட்ட தலைவர் த.தசாதிபன் அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட துணை செயலாளர் தாமஸ் இம்மானுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதே போன்று
இன்று கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு மா.தமிழ்அய்யா அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஆ.மணிகண்டன் அவர்களின் ஒருங்கிணைப்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி கந்தர்வக்கோட்டை யில் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் வட்டாரத்தலைவர் சு.ரஜோந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செய்தித்தொடர்பாளர் அ.ரகமதுல்லா, மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் முத்துக்குமார், வேலுமயில், கனகராஜ்,வேலு, அம்பிகாவதி, மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

