வேதாரண்யத்தில் உலக தாய்ப்பால் வார விழா வேதாரணியம் அரிமா சங்கம் சார்பில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
வேதாரணியம் ஆகஸ்ட் 7
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் அரசு மருத்துவமனையில் வேதாரணியம் அரிமா சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் Dr.தனசேகரன்,செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, மருந்தாளுனர் பொன்னிவளவன், வேதாரணியம் அரிமா சங்கத் தலைவர் Ln.பாஸ்கரன் பொருளாளர் .Ln.சுரேஷ்பாபு,உடனடி முன்னாள் தலைவர் Ln.ரவிச்சந்திரன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் RGMT.Ln.எல்விஸ் லாய் மச்சோடா, நல்லாசிரியர் Ln. செல்வராஜ்,Ln.வீர சுந்தரம்,Ln.ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


வேதாரண்யம் அரசு மருத்துவமனை மருத்துவர் தனசேகரன் பேசும்போது தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவரும் உணர்த்தும்விதமாக உலகெங்கும் உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருவதாகவும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை சிறப்பாக அமைய முதல் உன்னதமான ஊட்டச்சத்து தாய்ப்பால் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பின் அரசு மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வேதாரணியம் அரிமா சங்கத் தலைவர் Ln.பாஸ்கரன் மற்றும் மருத்துவர் தனசேகரன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் வழங்கினார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

