வேதாரணியம் அரசு மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள நீர் சுத்திகரிப்பு எந்திரம்
வேதாரணியம் ஆகஸ்ட் 07
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அரசு மருத்துவமனையில் கடந்த 2020 டிசம்பர் மாதம் காரைக்கால் ONGC நிறுவனத்தின் சார்பில் CSR நிதியின் கீழ்
ரூபாய் 3 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு (RO MINERAL WATER) செயல்படத் தொடங்கியது. மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் இருந்த இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களால் தினமும் வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மிகுந்த பயன் அடைந்து வந்தனர்.

தொடர்ந்து 8 மாதங்கள் நல்ல முறையில் இயங்கி வந்த இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் உள்ளது. கடந்த ஒரு வருடமாக செயல்படாமல் உள்ள இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை பற்றி வரும் நோயாளிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பலமுறை புகார் கூறியும் மருத்துவமனை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உள்ள வெளி நோயாளிகள் பிரிவுக்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை பழுது நீக்கி மீண்டும் செயல்பட
வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு வரும் நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

