சென்னை ஆகஸ்ட் 6
மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறந்த ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் அருண் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதலமைச்சர் வெளியிட்டார். பின்னர் நடைபெற்ற விழாவில், ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.


மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மனித உரிமை மீறல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது ஆகியவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி, திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கும், மதுரை காவல் ஆணையர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். தமிழக முதல்வர் மூலம் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். செய்தி தொகுப்பு
எம். ஆத்தி முத்து.

