பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் தருவதாக போலி
இணையதளத்தை
உருவாக்கி வடநாட்டு இளைஞர்கள் மோசடி:
தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு
ஏடிஎஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையிலான போலீசார் அதிரடி!!
எஸ்.பி.பாராட்டு!!
தூத்துக்குடி ஆகஸ்ட் 6
பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப் என்ற இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு உரிமம் பெற்று தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தை சேர்ந்த இருவர் கைது – வெளிமாநிலம் சென்று எதிரிகளை கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் குணசேகரன் (53) என்பவர் கடந்த 05.09.2021 அன்று எரிபொருள் விற்பனை நிலையம் (Petrol Bunk) வைப்பதற்காக தனது மொபைல் மூலம் கூகுள் இணையத்தில் பாரத் பெட்ரோலியம் என்ற பெயர் சம்மந்தமாக தேடும்போது http://petrolpumpdealership.in/ என்ற இணையதளம் (website) இருந்துள்ளது. அந்த இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் 07.09.2021 அன்று பாஸ்கர் என்ற பெயரில் ஒருவர் குணசேகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு, அவரது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், தகுதிச் சான்று, வங்கி விபரங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் வாட்ஸ் அனுப்புமாறு கூறியதால், குணசேகரன் அவற்றை அனுப்பியுள்ளார்.*
பின்னர் info@pumpdealer.in என்ற மின்னஞ்சலிலிருந்து Bharat Petroleum Corporation Ltd, Account No. 025352000002734 IFSC : YESB0000268 என்ற வங்கி கணக்கிற்கு பதிவுக் கட்டணமாக ரூபாய் 19,500/- செலுத்துமாறு மின்னஞ்சல் வந்ததால் குணசேகரன் மேற்படி பணத்தை கட்டியுள்ளார். மீண்டும் கடந்த 23.09.2021 அன்று டீலர்ஷிப் சான்று பெறுவதற்காக ரூபாய் 1,10,000/- செலுத்துமாறு கூறியுள்ளதால் குணசேகரன் அதனையும் கட்டியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து 05.10.2021 அன்று உரிமம் பெறுவதற்காக 3,50,000/- பணம் கேட்டதால் சந்தேகமடைந்த குணசேகரன் விசாரித்து பார்த்தபோது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.*

*மேற்படி குணசேகரன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.*
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தை உருவாக்கியவர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த நாரோட்டம் குமார் ராய் என்பவர் மகன் சுபோஜித் குமார் ராய் (33) என்பதும், மேற்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வபன்குமார் மண்டல் மகன் சுமன் மண்டல் (36) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி மேற்கு வங்காளம் மாநிலம் சென்று இருவேறு இடங்களில் இருந்த எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு கணினி CPU ஆகியவற்றை பறிமுதல் செய்து அங்குள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக உத்தரவு பெற்று தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IV ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

*இவ்வழக்கில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மேற்கு வங்காள மாநிலம் சென்று சென்று அங்கு இருவேறு இடங்களில் இருந்த எதிரிகளின் இருப்பிடங்களை கண்டுபிடித்து, அவர்களை கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமயிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.*

